search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடை"

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் குமார்நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அதன்படி குமார் நகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர, டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ்காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகரில் மின் வினியோகம் இருக்காது.

    சந்தைபேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம்ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன்மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்ங்காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம்ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

    கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்குட்பட்ட பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியாா் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார். கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாப்பட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பிடாரம்பட்டி, தொட்டியம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, வலையப்பட்டி, வேகுப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரசோழபுரம், மேக்கினிப்பட்டி, செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், குழிபிறை, பணையப்பட்டி, ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செம்மலாப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், சொக்கநாதபட்டி, நகரப்பட்டி, அம்மாபட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெரம்பூர், கானூர், சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம்,

    பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்தார்.

    • வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.
    • தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.7 கோடி மதிப்பில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார்.

    தற்போது அந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நிறைவுற்று அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மின்கட்டண உயர்வை பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான விளக்கம் கொடுத்து விட்டது. அதன்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மேலும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கு வழங்கப்பட்டும் வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் மட்டுமே சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மாற்றத்தையும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றம் செய்துள்ளது.

    மின்வெட்டு தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் கேட்கிறேன் ஓ.பி.எஸ். வீட்டில் மின் தடை ஏற்பட்டதா? அல்லது அவரது தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டதா?.

    தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்டி கொள்வதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் மின்தடை உள்ளது என குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.

    எனவே எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது.

    பா.ம.க தலைவர் அன்புமணி, மது விற்பனையில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆண்டிற்கே ரூ.45 ஆயிரம் கோடிக்கு தான் மது விற்பனை நடக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்குவதற்காகவே சில கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் கிடையாது.

    இப்படி அறிக்கை விடுபவர்கள் மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைத்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மற்றபடி அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் அவர்கள் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் இருந்தனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • காலை 8 மணி முதல் 11 மணி வரை நிறுத்தம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் வருகிற 13-ந்தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை ௧த்தியவாடி மற்றும் விசாரம் பிரிவுக்குட்பட்ட டேனரி ரோடு, ஆஜி பேட்டை, ஹன்ச நகர், பாகர் தெரு, புதுப்பேட்டை, புளியமரம்நிறுத்தம், புளி மாதா தெரு, பேட்டை கடை தெரு, மீரா சாகிப்தெரு, சவுகார் தெரு, முத்துஜார் தெரு மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்குட்பட்ட முப்பதுவெட்டி கிளைவ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதே போன்று வருகிற 14-ந்தேதி காவலூர் பிரிவுக்குட்பட்ட புங்கனூர், காவனூர் வெள்ளை குளம், கண்ணாடி குடிசை குப்பம், கண்ணாடி பாளையம் மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட உப்பு பேட்டை, கூரம்பாடி, கிருஷ்ணவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என ஆற்காடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
    • மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் கிழிந்து பறந்தன. சில இடங்களில் மின் கம்பங்களில் கிழிந்த பேனர்கள் தொங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் பயணித்தனர்.

    மேலும் சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. திருவள்ளூர் பகுதியில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மாலை 6 மணிக்கு சீரானது. ஆனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்த கிராமங்களில் விடிய, விடிய மின்தடையால் பொது மக்கள் தவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
    • 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூலனூர், கன்னிவாடி, மற்றும் கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் காலை 9மணிமுதல் மதியம் 2மணிவரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன்வலசு ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கலூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லாக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்
    • தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லாக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயப்பகுதியாகும். பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீருக்காக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பம்பு செட்டுகள் இயங்காதால் பயிர்கள் காய்ந்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • நாளை 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
    • வி.ஜி. வி நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

    பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி. வி நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.

    5 வரை அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    இருகூர் மின்னூட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை அந்த பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னயம்பாளையம் (ஓரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.
    • திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை.

    சேலம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்கள் எபிநேசன்-பிரியங்கா ஆகியோரை வாழ்த்தினார்.

    பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.

    இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில்,இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகி கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தை பற்றி தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.

    சென்னையில் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற கைதி மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும்.

    திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

    சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும், சீர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே.ரோடு ஒருபகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில், மேலவடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர். 

    பந்தடி 1 முதல் 7-வது தெருக்கள், மகால் 3 முதல் 7-வது தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, தெற்குமாசி வீதியில் சில பகுதிகள், மஞ்சனக்காரத் தெருவின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபத்கானா தெரு, 10 தூண் சந்து ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை எஸ்.எஸ்.காலனி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வானமாமலைநகர், வேல்முருகன் நகர், துரைசாமி நகர், ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, அரிஸ்டோ மருத்துவமனை, சத்தியமூர்த்தி நகர், வ.உ.சி.தெரு, நேரு நகர், போடிலைன், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மெண்ட், ஜெய்நகர், தானத்தவம்ரோடு, மீனாட்சி நகர், அனீஸ் கான்வென்ட், ஜீவனா பள்ளி, ராஜம் நகர், ராகவேந்திரா நகர், எம்.எம்.நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
    ×